Friday, September 3, 2010

ஏனைய தொழிநுட்ப செய்தி குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு




நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள்.

புதிய ரோபோவிற்கு பிறந்த குழந்தை என பெயர் சூட்டப்பட்டாலும், இந்த ரோபோ நன்கு வளர்ச்சியடைந்த குழந்தை போல் செயல்படும். இந்த ரோபோ, தானே எழுந்து நிற்கும்; எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும்; தவழும். இந்த புதிய ரோபோவில் இரண்டு வீடியோ கேமராக்கள் உள்ளன. அதன் காது பகுதியில், இரண்டு மைக்ரோ போன்கள் பொருத்தப்பட்டுள்ளன. உடல் பகுதியில் மோட்டார் மற்றும் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோ குறித்து இதை உருவாக்கிய குழுவின் இயக்குனர் அசடா மினோரு கூறியதாவது:


மனிதர்களுடன் சேர்ந்து வாழும் திறமை பெற்றுள்ள ரோபோக்களை உருவாக்குவதுதான் எங்கள் லட்சியம். அதற்கு தேவை மனிதர்களைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ரோபோக்களை தயாரித்துள்ளோம். இந்த குறிப்பிட்ட ரோபோ திட்டம், குழந்தைகளை மையமாக கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

பிறந்த குழந்தை ரோபோவைத் தவிர, குழந்தைகள் ரோபோக்களும் இந்த ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள், மனிதர்களின் பேச்சை புரிந்து கொள்ளும்; பொருட்களை அடையாளம் காணும். பின்னர் அதற்கு ஏற்றார் போல் பதிலளிக்கும். “கின்டி’ என்ற இன்னொரு ரோபோவையும் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. ஐந்து வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் இந்த ரோபோ, முகத்தில் பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். மனித வளர்ச்சியை ஆராய்வதற்காக இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும். எனினும், மனித இன வளர்ச்சி மர்மத்திற்கு இதுபோன்ற ரோபோக்கள் மூலம் விடை கிடைக்குமா என்பது கேள்விக்குறித்தான்!

Tuesday, August 10, 2010

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம்.

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும்.

இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.

Sunday, July 18, 2010

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்


மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.


Monday, July 12, 2010

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?



தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.

இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர்.

இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார்.

உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார்.

பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது.

அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது.

இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்!

ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன.

ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன.
இன்சுலின் கண்டுபிடித்திருக்காவிட்டால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முன்னேற்றங்கள் நடந்திருக்காது. இத்தகைய அற்புத கண்டுபிடிப்புக்காக பேண்டிங் மற்றும் மேக்லியோட் இருவருக்கும் 1923-ம் ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Sunday, June 27, 2010

சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு

சூரியக்குடும்பத்துக்கு வெளியே புதிய இளமையான கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோள் உருவாக்கம் பற்றிய விதிகளை இக்கோள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

சூரியனிலிருந்து சனி கிரகம் உள்ள தொலைவுக்கு சமமாக, சூரியக்குடும்பத்துக்கு வெளியே 63.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் பெட்டா பிக்டோரிஸ் என்ற கோள் உள்ளது. இது தன்மையில் சூரியனை ஒத்துள்ளது. இக்கோள் உருவாகி ஒரு கோடி 20 லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே இளமையான கோளாக கருதப்படுகிறது. சூரியனை ஒத்துள்ள இக்கோள், குறுகிய காலத்தில் இந்த வடிவத்தை பெற்றுள்ளது. ஆனால் சூரியனின் வயதோ, 450 கோடி ஆண்டுகள். பெட்டா 2003ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அது ஒரு கோள்தான், நட்சத்திரமல்ல என்று உறுதி செய்யப்பட்டது.

பெட்டா பிக்டோரிஸ் கோளுக்கு அருகில் அதன் துணைக்கோளாக சுற்றி வரும் ஒரு கோளை விஞ்ஞானிகள், தென் ஐரோப்பிய வானியல் கூடத்தின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம், கடந்த ஆண்டில் கண்டறிந்தனர். இந்த கோளுக்கு பெட்டா பிக்டோரிஸ் பி என்று பெயரிட்டுள்ளனர். பொதுவாக ஒரு கோள், முழுமையான வடிவத்துடன், கோளுக்கேயுரிய தன்மைகளை பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ஆண்டுகளாகும் என்று அறிவியல் விதிகள் கூறுகின்றன. பி.டி.20 1790பி என்ற கோள், மிகக் குறைந்தபட்சமாக 30 கோடியே 50 லட்சம் ஆண்டுகளில் உருவானதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெட்டா பிக்டோரிஸ் பி உருவாகி, சில லட்சம் ஆண்டுகளே ஆகியிருக்குமென்று தெரியவந்துள்ளது. இக்கோள், வியாழனை விட ஒன்பது மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியக்குடும்பத்துக்கு வெளியே, இப்போதைக்கு மிக இளமையான கோள் இதுதான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு

சூரியக்குடும்பத்துக்கு வெளியே புதிய இளமையான கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோள் உருவாக்கம் பற்றிய விதிகளை இக்கோள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

சூரியனிலிருந்து சனி கிரகம் உள்ள தொலைவுக்கு சமமாக, சூரியக்குடும்பத்துக்கு வெளியே 63.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் பெட்டா பிக்டோரிஸ் என்ற கோள் உள்ளது. இது தன்மையில் சூரியனை ஒத்துள்ளது. இக்கோள் உருவாகி ஒரு கோடி 20 லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே இளமையான கோளாக கருதப்படுகிறது. சூரியனை ஒத்துள்ள இக்கோள், குறுகிய காலத்தில் இந்த வடிவத்தை பெற்றுள்ளது. ஆனால் சூரியனின் வயதோ, 450 கோடி ஆண்டுகள். பெட்டா 2003ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அது ஒரு கோள்தான், நட்சத்திரமல்ல என்று உறுதி செய்யப்பட்டது.

பெட்டா பிக்டோரிஸ் கோளுக்கு அருகில் அதன் துணைக்கோளாக சுற்றி வரும் ஒரு கோளை விஞ்ஞானிகள், தென் ஐரோப்பிய வானியல் கூடத்தின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம், கடந்த ஆண்டில் கண்டறிந்தனர். இந்த கோளுக்கு பெட்டா பிக்டோரிஸ் பி என்று பெயரிட்டுள்ளனர். பொதுவாக ஒரு கோள், முழுமையான வடிவத்துடன், கோளுக்கேயுரிய தன்மைகளை பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ஆண்டுகளாகும் என்று அறிவியல் விதிகள் கூறுகின்றன. பி.டி.20 1790பி என்ற கோள், மிகக் குறைந்தபட்சமாக 30 கோடியே 50 லட்சம் ஆண்டுகளில் உருவானதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெட்டா பிக்டோரிஸ் பி உருவாகி, சில லட்சம் ஆண்டுகளே ஆகியிருக்குமென்று தெரியவந்துள்ளது. இக்கோள், வியாழனை விட ஒன்பது மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியக்குடும்பத்துக்கு வெளியே, இப்போதைக்கு மிக இளமையான கோள் இதுதான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

Sunday, June 6, 2010

அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்


உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.

1.மாரடைப்பு (Coronary heart disease)

2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)

3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)

4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)

5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)

6.HIV/AIDS

7.காச நோய் (Tuberculosis)

8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)

9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)

10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)

இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல்

Sunday, May 30, 2010

மன அழுத்தத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி

பரபரப்பான இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே மன அழுத்தத்தை குறைப்பதற்கான தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

இந்த மன அழுத்தத்தை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.இருக்கையில் அமர்ந்தவாறே இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.

1..தலையை இடதுபக்கமாக சாய்த்து இடதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.வலது கையை தலையில் சிறிது அழுத்துவதன் மூலம் அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

2.இதே போன்று சமநிலையான ,இறுக்கமற்ற நிலையில் தலையை வலது பக்கமாக சாய்த்து வலதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.

3.ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது இடமிருந்து வலதுபக்கமாக தலையை சுழற்றவும், இவ்வாறே ஒரு நிலையில் இருது கொண்டு கண்களை இமைக்காது வலதுபக்கமிருந்து இடது பக்கமாக தலையை சுழற்றவும்.

4. இடது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக வலபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

5. வலது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக இடதுபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

6.இருக்கையில் அமர்ந்தவாறே குனிந்து உங்களது பாதங்களை தொடவும்.

7.இருக்கையில் அமர்ந்தவாறே கைகளை முன்நோக்கி நீட்டி இருகைகளையும் ஒன்று சேர்த்து பாதங்களைத் தொட முயற்சித்து அழுத்தத்தை கொடுக்கவும்.

8.வலதுகயை நீட்டி தூக்கி பெருவிரல் மற்றும் நடுவிரல்களுக்கு மாறி மாறி அழுத்தத்தை கொடுக்கவும், இதேபோல் இடது கைக்கும் செய்யவும்.

இந்த பயிற்சிகளை நீங்கள் வாரத்தில் 3- 4 தடவைகள் செய்யலாம் மேலும் 15-30 செக்கன்கள் வரை இதை செய்து வந்தால் மன அழுத்தம் குறையும்

நீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது.

கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட யூடியூப் வீடியோ பதிவு தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்குகிறது. யூடியூப்பில் இடம் பெறும் வீடியோ கோப்புகளில் அலுப்பூட்டும் காட்சிகள் அதிகம் என்றாலும் அவற்றுக்கு மத்தியில் புன்னகைக்க வைக்கக்கூடியதும், பிரம்மிப்பில் ஆழ்த்தக்கூடியதுமான காட்சிகள் அவ்வப்போது இணையவாசிகளை கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலமாகி விடுவது உண்டு.

அந்தவகையில் இப்போது யூடியூப்பில் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று பிரபலமாகி இருக்கிறது. பார்ப்பவர்களை யெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ள அந்த வீடியோ காட்சியானது இதுவரை பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டுள்ளது.

3 இளைஞர்கள் தண்ணீர் மேல் வேகமாக நடந்து செல்லும் காட்சியை அந்த வீடியோ சித்தரிக்கிறது. இதுவரை யாரும் பார்த்தறியாத செயற்கறிய செயல் எனும் வர்ணனையோடு அல்ப் கார்ட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளனர். போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் மீது இந்த 3 இளைஞர்களும் மின்னல் வேகத்தில் நடந்து செல்லும் காட்சி உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது.

முதல் பார்வைக்கு பிரம்மிப்பை உண்டாக்கும் இந்த காட்சி உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டதா அல்லது ஏதாவது ஏமாற்று வேலையா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த காட்சிக்கு பின்னே எந்த ஏமாற்று வேலையும் கிடையாது. இது முழுக்க முழுக்க சாகசம் என்று உற்சாகமாக கூறுகின்றனர்.

இப்படி தண்ணீர் மேல் நடக்கும் நம்ப முடியாத செயலை ஒரு புதிய விளையாட்டு என்று வர்ணிக்கும் கார்ட்னர் இந்த விளை யாட்டிற்கு நீர்மலையேறுதல் என்று புதியதோர் பெயரையும் சூட்டியுள்ளார். நீர்மேல் நடப்பது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும் உண்மையில் தண்ணீர் புகாத ஷýவை அணிந்து கொண்டால் தண்ணீர் மேல் நடக்கலாம் என்றார் அவர்.

இத்தகைய ஷýவை அணிந்து கொண்டு தண்ணீர் மேல் கால் வைத்ததும் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடுவது போல நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். தையல் இயந்திரத்தின் செயல்பாட்டை போல கால்கள் படுவேகமாக நடக்கும் போது இது எளிதில் சாத்தியம் என்கிறார் அவர். இப்படி போர்ச்சுகல் ஏரியில் அவர்கள் 10 அடிகளை வைத்து நடந்து காட்டியிருக்கின்றனர். மெய்யோ பொய்யோ தெரியாது. ஆனால் இந்த சாகச விளையாட்டு இன்டெர்நெட்டில் ஆச்சர்ய அலைகளை பரப்பி வருகிறது

Monday, May 10, 2010

சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கும் லெமன் ஜுஸ்

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் எலுமிச்சை சாறு தடுக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான்டியகோவில் உள்ளது ஒருங்கிணைந்த சிறுநீரக நல மையம்.

அதன் இயக்குனர் ரோஜர் சர். அவர் கூறியதாவது:

சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சையின் செயல்கள் பற்றி எனது தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

தினசரி 4 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக சிலரை குடிக்கச் செய்து பரிசோதித்தோம். சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குறைந்தது தெரிய வந்தது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. மற்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களைக் காட்டிலும், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலுமிச்சை சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சை, சாத்துக்குடி தவிர்த்து மற்ற பழங்களில் சிட்ரஸ் மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியம், புரோட்டீன் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க, எலுமிச்சை சாறு மிகவும் உதவும். உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரக கல் உருவாதில் அதிக பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதை தவிர்க்க முடியும் என்றார் ரோஜர் சர்

Sunday, March 21, 2010

ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம்.
ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.

ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.

இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.

இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.
மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

முதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.

இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.

லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.

இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.

முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.

Friday, March 19, 2010

சோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்

பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வாழும் இளைஞர்கள் இன்று தங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும் தகவல்கள், ஆசை, அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
போகிற போக்கில் இதனை மேற்கொள்ள மொபைல் போனில் இந்த வசதிகள் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் இலக்குடன் பிளை மொபைல்ஸ் நிறுவனம் Fly LINKZ (E145) என்னும் போனை வடிவமைத்து விற்பனைக்கு தந்துள்ளது.
இந்த போனில் 240 x 400 ரெசல்யூசனுடன் வண்ணத்திரை பளிச் என உள்ளது. 2 எம்பி கேமரா 1600 x 1200 ரெசல்யூசனில் படங்களைத் தருகிறது. போட்டோ ஸ்லைட் ஷா வசதியும் உண்டு.
மோஷன் சென்சார் கேம்ஸ், வீடியோ மற்றும் ஆடியோ ரெகார்டிங் பிளேயர், வால்யூம் இயக்க மட்டும் கீகள், 3.5 மிமீ ஆடியோ ஜாக்,எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர், கையில் எழுதினால் புரிந்து இயங்கும் டெக்ஸ்ட் வசதி, 1000 முகவரி கொள்ளும் அட்ரஸ் புக், 2000 எஸ்.எம்.எஸ். கொள்ளும் மெமரி, போட்டோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி, எண்களை அழைக்கவிடாமல் தடுக்கும் வசதி, பல மத விழா காட்டும் காலண்டர், ஸ்டீரியோ புளுடூத், மொபைல் ட்ரேக்கர், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் இணைத்து இயக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.
சோஷியல் நெட்வொர்க் தளங்களை எளிதாக அணுகவும், இன்ஸ்டண்ட் மெசேஞ்சர்களை இயக்கவும் Nimbuzz அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Skype, Windows Live Messenger (MSN), GTalk, Yahoo!, AIM, MySpace, ICQ ஆகியவற்றில் இயங்க சப்போர்ட் தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெறப்படும் லைவ் காண்டாக்ட் லிஸ்ட் மூலம் ஆன்லன் மற்றும் ஆப் லைனில் இருப்பவர்கள், பிசியாக உள்ளவர்கள், மெசஞ்சர் விண்டோவில் இருந்து விலகி உள்ளவர்களைக் காட்டுகிறது. Twitter, Facebook, Picasa, Flickr and Google Calendar ஆகியவற்றுடன் எளிதாக இணைப்பு கொள்ள Snaptu தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு லேட்டஸ்ட் ஸ்கோர், ராய்ட்டர்ஸ், பி.பி.சி., நியூ யார்க் டைம்ஸ்,யாஹூ மற்றும் பல தளங்களில் இருந்து அந்த நேரத்திய செய்திகளை அறியலாம்.

Wednesday, February 10, 2010

ivu Toolbar Gmail இன் Google Buzz என்னும் தொடர்பாடல் துறைக்கான புதியதொரு சேவை

ஐந்து வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் Gmail ஆனது ஒரு வெறும் மின்னஞ்சல் சேவையாக மாத்திரமே செயற்பட்டுக்கொண்டிருந்தது.காலப்போக்கில் Gmail ஆனது அரட்டை பகுதியை (Chat) ஆரம்பித்து தொடர்பாடல் துறையை மென்மேலும் மெருகூட்டியது. அத்துடன் மேலும் பல படிகள் சென்று குரல்வழி அரட்டை (Voice Chat) ,காணொளி அரட்டை (Video Chat) என தனது தொடர்பாடல் துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்தியது. அத்தகைய பல புரட்சிகளை படைத்த Gmail ஆனது மேலும் ஒரு புதியதொரு சமூக தொடர்பாடல் சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.





Google Buzz எனப்படும் இச்சேவையானது twitter, lite facebook போன்று நுண்ணிய பதிவுகளை (Micro blogging) பிறருடன் பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவையினூடாக புகைப்படங்கள்,காணொளிகள்,போன்ற பல்வேறுபட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சேவையை எமது Gmail முகப்பு பக்கத்தில் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும். இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது. (எனது முகப்பு பகுதியிலும் இதுவரை தோன்றவில்லை)காலப்போக்கில் இது தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் இந்த சேவைக்குரிய உங்களது தனிப்பட்ட கணக்கை நீங்கள் உருவாக்கி கொள்ளமுடியும்.

Google Buzz இல் என்னை பின்தொடர எனது விபரம்:http://www.google.com/profiles/vanniinfo

Google Buzz இன் இணையச்சுட்டி: http://www.google.com/buzz






Thursday, February 4, 2010

கூகுள் டாக் சில நுட்பங்கள். ( டிப்ஸ் & டிரிக்ஸ்)

பலர் கூகுள் டாக் ஐ பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள் ஆனால் அதில் உள்ள நுட்பங்கள் சிலருக்கு தான் தெரிய வாய்ப்புண்டு. அவற்றில் சில இங்கே.

நுட்பம் 1

சாட்டிங்க் செய்கையில் பாண்ட் அளவை கூட்டி குறைப்பதற்கு கீபோட் இல் கன்ரோல் விசையை அழுத்தியபடி மவுஸ் வீலை சுற்றுங்கள். பாண்ட் அளவு வாசிக்க இலகுவாக கூடி குறையும்.

நுட்பம் 2

சாட்டிங்கில் டைப் செய்யும் இடம் எப்போதும் ஒரு லைனில் இருக்கும் இதை அதிகரிக்க செய்வதற்கு கீபோட் இல் சிப்ட் விசையை அழுத்தியபடி எண்டர் விசையை தட்டிக் கொண்டே போக டைப் செய்யும் இடத்தின் அளவு அதிகரிக்கும்.

நுட்பம் 3

சாட்டிங்கில் டைப் செய்யும் எழுத்தை போல்ட் செய்ய *this* இவ்வாறு எழுதுங்கள்.

நுட்பம் 4

சாட்டிங்கில் டைப் செய்யும் எழுத்தை இட்டாலிக் செய்ய _this_ இவ்வாறு எழுதுங்கள்.

நுட்பம் 5

திறக்கும் விண்டோக்களை Tab விசை மூலம் கையாளலாம். ஒவ்வொருமுறை விசையை அழுத்தும் போதும் அடுத்த அடுத்த விண்டோக்கள் திறக்கும். Tab விசையுடன் எண்டரையும் தட்டினால் சாட் விண்டோ முழுதாக திறந்து கொள்ளும். கன்ரோல் விசையுடன் Tab ஐ அழுத்தினால் சாட் விண்டோவை தானகவே முழுதாக திறக்கலாம்.

நுட்பம் 6

கூகுள் டாக்கில் ஒரே நேரத்தில் சுமார் 32767 நீளமான எழுத்துருக்களை எழுதலாம்