சூரியனிலிருந்து சனி கிரகம் உள்ள தொலைவுக்கு சமமாக, சூரியக்குடும்பத்துக்கு வெளியே 63.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் பெட்டா பிக்டோரிஸ் என்ற கோள் உள்ளது. இது தன்மையில் சூரியனை ஒத்துள்ளது. இக்கோள் உருவாகி ஒரு கோடி 20 லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே இளமையான கோளாக கருதப்படுகிறது. சூரியனை ஒத்துள்ள இக்கோள், குறுகிய காலத்தில் இந்த வடிவத்தை பெற்றுள்ளது. ஆனால் சூரியனின் வயதோ, 450 கோடி ஆண்டுகள். பெட்டா 2003ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அது ஒரு கோள்தான், நட்சத்திரமல்ல என்று உறுதி செய்யப்பட்டது. பெட்டா பிக்டோரிஸ் கோளுக்கு அருகில் அதன் துணைக்கோளாக சுற்றி வரும் ஒரு கோளை விஞ்ஞானிகள், தென் ஐரோப்பிய வானியல் கூடத்தின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம், கடந்த ஆண்டில் கண்டறிந்தனர். இந்த கோளுக்கு பெட்டா பிக்டோரிஸ் பி என்று பெயரிட்டுள்ளனர். பொதுவாக ஒரு கோள், முழுமையான வடிவத்துடன், கோளுக்கேயுரிய தன்மைகளை பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ஆண்டுகளாகும் என்று அறிவியல் விதிகள் கூறுகின்றன. பி.டி.20 1790பி என்ற கோள், மிகக் குறைந்தபட்சமாக 30 கோடியே 50 லட்சம் ஆண்டுகளில் உருவானதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெட்டா பிக்டோரிஸ் பி உருவாகி, சில லட்சம் ஆண்டுகளே ஆகியிருக்குமென்று தெரியவந்துள்ளது. இக்கோள், வியாழனை விட ஒன்பது மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியக்குடும்பத்துக்கு வெளியே, இப்போதைக்கு மிக இளமையான கோள் இதுதான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர் |
Sunday, June 27, 2010
சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு

Sunday, June 6, 2010
அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்
1.மாரடைப்பு (Coronary heart disease) 2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases) 3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections) 4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease) 5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases) 6.HIV/AIDS 7.காச நோய் (Tuberculosis) 8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers) 9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents) 10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight) இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல் |