‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. |
Sunday, July 18, 2010
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்
Monday, July 12, 2010
இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?
இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர். இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார். உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார். பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது. அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது. இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்! ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன. ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன. |
