மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே மன அழுத்தத்தை குறைப்பதற்கான தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. இந்த மன அழுத்தத்தை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.இருக்கையில் அமர்ந்தவாறே இந்த உடற்பயிற்சியை செய்யலாம். 1..தலையை இடதுபக்கமாக சாய்த்து இடதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.வலது கையை தலையில் சிறிது அழுத்துவதன் மூலம் அழுத்தத்தைக் கொடுக்கலாம். 2.இதே போன்று சமநிலையான ,இறுக்கமற்ற நிலையில் தலையை வலது பக்கமாக சாய்த்து வலதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும். 3.ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது இடமிருந்து வலதுபக்கமாக தலையை சுழற்றவும், இவ்வாறே ஒரு நிலையில் இருது கொண்டு கண்களை இமைக்காது வலதுபக்கமிருந்து இடது பக்கமாக தலையை சுழற்றவும். 4. இடது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக வலபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும். 5. வலது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக இடதுபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும். 6.இருக்கையில் அமர்ந்தவாறே குனிந்து உங்களது பாதங்களை தொடவும். 7.இருக்கையில் அமர்ந்தவாறே கைகளை முன்நோக்கி நீட்டி இருகைகளையும் ஒன்று சேர்த்து பாதங்களைத் தொட முயற்சித்து அழுத்தத்தை கொடுக்கவும். 8.வலதுகயை நீட்டி தூக்கி பெருவிரல் மற்றும் நடுவிரல்களுக்கு மாறி மாறி அழுத்தத்தை கொடுக்கவும், இதேபோல் இடது கைக்கும் செய்யவும். இந்த பயிற்சிகளை நீங்கள் வாரத்தில் 3- 4 தடவைகள் செய்யலாம் மேலும் 15-30 செக்கன்கள் வரை இதை செய்து வந்தால் மன அழுத்தம் குறையும் |
Sunday, May 30, 2010
மன அழுத்தத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி
நீர்மேல் நடக்கும் வீடியோ
வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது. கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட யூடியூப் வீடியோ பதிவு தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்குகிறது. யூடியூப்பில் இடம் பெறும் வீடியோ கோப்புகளில் அலுப்பூட்டும் காட்சிகள் அதிகம் என்றாலும் அவற்றுக்கு மத்தியில் புன்னகைக்க வைக்கக்கூடியதும், பிரம்மிப்பில் ஆழ்த்தக்கூடியதுமான காட்சிகள் அவ்வப்போது இணையவாசிகளை கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலமாகி விடுவது உண்டு. அந்தவகையில் இப்போது யூடியூப்பில் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று பிரபலமாகி இருக்கிறது. பார்ப்பவர்களை யெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ள அந்த வீடியோ காட்சியானது இதுவரை பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டுள்ளது. 3 இளைஞர்கள் தண்ணீர் மேல் வேகமாக நடந்து செல்லும் காட்சியை அந்த வீடியோ சித்தரிக்கிறது. இதுவரை யாரும் பார்த்தறியாத செயற்கறிய செயல் எனும் வர்ணனையோடு அல்ப் கார்ட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளனர். போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் மீது இந்த 3 இளைஞர்களும் மின்னல் வேகத்தில் நடந்து செல்லும் காட்சி உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது. முதல் பார்வைக்கு பிரம்மிப்பை உண்டாக்கும் இந்த காட்சி உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டதா அல்லது ஏதாவது ஏமாற்று வேலையா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த காட்சிக்கு பின்னே எந்த ஏமாற்று வேலையும் கிடையாது. இது முழுக்க முழுக்க சாகசம் என்று உற்சாகமாக கூறுகின்றனர். இப்படி தண்ணீர் மேல் நடக்கும் நம்ப முடியாத செயலை ஒரு புதிய விளையாட்டு என்று வர்ணிக்கும் கார்ட்னர் இந்த விளை யாட்டிற்கு நீர்மலையேறுதல் என்று புதியதோர் பெயரையும் சூட்டியுள்ளார். நீர்மேல் நடப்பது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும் உண்மையில் தண்ணீர் புகாத ஷýவை அணிந்து கொண்டால் தண்ணீர் மேல் நடக்கலாம் என்றார் அவர். இத்தகைய ஷýவை அணிந்து கொண்டு தண்ணீர் மேல் கால் வைத்ததும் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடுவது போல நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். தையல் இயந்திரத்தின் செயல்பாட்டை போல கால்கள் படுவேகமாக நடக்கும் போது இது எளிதில் சாத்தியம் என்கிறார் அவர். இப்படி போர்ச்சுகல் ஏரியில் அவர்கள் 10 அடிகளை வைத்து நடந்து காட்டியிருக்கின்றனர். மெய்யோ பொய்யோ தெரியாது. ஆனால் இந்த சாகச விளையாட்டு இன்டெர்நெட்டில் ஆச்சர்ய அலைகளை பரப்பி வருகிறது |
Monday, May 10, 2010
சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கும் லெமன் ஜுஸ்
அதன் இயக்குனர் ரோஜர் சர். அவர் கூறியதாவது:
சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சையின் செயல்கள் பற்றி எனது தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
தினசரி 4 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக சிலரை குடிக்கச் செய்து பரிசோதித்தோம். சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குறைந்தது தெரிய வந்தது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. மற்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களைக் காட்டிலும், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலுமிச்சை சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சை, சாத்துக்குடி தவிர்த்து மற்ற பழங்களில் சிட்ரஸ் மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியம், புரோட்டீன் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க, எலுமிச்சை சாறு மிகவும் உதவும். உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரக கல் உருவாதில் அதிக பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதை தவிர்க்க முடியும் என்றார் ரோஜர் சர்
